சீப்புக்குளம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி முன்னங்காலில் காயமடைந்த காட்டு யானைக்கு நான்காவது முறையாக கால்நடை மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, காயமடைந்த யானைக்கு நேற்று வியாழக்கிழமை வனவிலங்கு அதிகாரிகளால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பண்டுலகம கால்நடை மருத்துவப் பிரிவின் வனவிலங்கு கால்நடை வைத்தியர் உதெஷிகா மதுவந்தி உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள், குறித்த யானையின் உடல்நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானையின் உடல்நிலைக்கு ஏற்ப தொடர்ந்து தேவையான கால்நடை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

