எந்தவொரு போர் மோதலும் மக்கள் குழுவிற்கு சாதகமான நிலையை உருவாக்காது- ஜனாதிபதி!

“எந்தவொரு போர் மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், போர் ரீதியாகவும் பாரிய ஆயுதத் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்பட்டு வரும் உலகில் இது எவ்வளவு அழிவுகரமானது என்பது குறித்து நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, இலங்கையின் நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போருடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்புகளையும் வழிகாட்டல்களையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என்பதாகும்.” என்றார்.
இந்த போர்ச் சூழலினால் இலங்கையின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாரிய தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும், தனிமைப்பட்ட ரீதியில் அதிலிருந்து எம்மால் மீள முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *