மக்களையும் கலாசாரங்களையும் மரபுகளையும் இணைக்கும் ஹிந்தி மொழியின் செழுமை, அழகு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டாடும் ஹிந்தி (2026) தின நிகழ்வு கண்டி கோல்டன் கிரவுன் ஹோட்டலில் நடைபெற்றது.
கண்டிக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் திருமதி சரண்யா வீ.எஸ்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி வஜிர குணசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் ஹிந்தி ஆசிரியர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், மாணவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் ஹிந்தி ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

