இந்து மக்களின் முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று (நவம்பர் 24) பக்திபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு இந்து ஆலயங்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, தீப ஒளியால் அலங்கரிக்கப்படுகின்றன.
திருக்கார்த்திகை தினத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இதனை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் இடம்பெறுகின்றன. பெருமளவிலான பக்தர்கள் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
மேலும், குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கின்றனர்.
இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் திருக்கார்த்திகைத் திருநாள் அனைவருக்கும் ஆன்மிக மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வழங்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

