கரீபியன் கடலில் கப்பல் ஒன்றை இலக்காகக் கொண்டு அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும், இத்தகைய தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளாக இருக்கலாம் என மனித உரிமை நிபுணர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இதுபோன்ற நடவடிக்கைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

