மின் கட்டணத்தில் மாற்றம்!

2026ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் 2026 மார்ச் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்த முன்மொழிவை மீளாய்வு செய்ததன் பின்னர் தயாரிக்கப்பட்ட ஆலோசனைப் பத்திரத்தை http://www.pucsl.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிட முடியும்.

 

அதற்கமைய, உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைக் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது பின்வரும் வழிகளூடாகச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

“2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைக் கோரல்”

தலைவர்,

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,

06 ஆம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

28, சாந்த மைக்கல் வீதி,

கொழும்பு 03.

 

தொலைநகல் (Fax): 011 2392641

 

வட்ஸ்அப் (WhatsApp): 076 4271030

 

மின்னஞ்சல்: info@pucsl.gov.lk

 

இணையத்தளம்: www.pucsl.gov.lk

 

பேஸ்புக் பக்கம்: www.facebook.com/pucsl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *