இராணுவ உணவகங்களில் பொதுமக்கள் கொள்வனவு செய்ய முற்றாக தடை!

இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இடம்பெற்றது .

இவ் அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ம் வட்டார உறுப்பினர் குறிஞ்சி குமரன் என்பவரால் பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இராணுவ உணவகங்களில் பொது மக்களுக்கு வியாபாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என ஓர் பிரேரணை கொண்டு வரப்பட்டது .

இவ் பிரேரணை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நான்கு பேர் உட்பட சபை அமர்வில் பங்கு கொண்ட அனைத்து உறுப்பினர்களாலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது .

குறிப்பாக இராணுவ உணவகங்களில் இராணுவ வீரர்களுக்கு மாத்திரமே வியாபார நடவடிக்கைகள் இடம் பெற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *