தேவா அலோசியஸின் ‘துவக்கு ‘முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் தேவா அலோசியஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இத் திரைப்படம் ‘சாவடி’  திரைப்படத்தின் அடுத்த கோணக் கதையான (Story-2) படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 15-ம் தேதி (15.02.2026) அன்று முறைப்படி பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

மட்டக்களப்பில் பெய்து வந்த கனமழையையும் பொருட்படுத்தாமல், படக்குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

திட்டமிட்டபடி முதல்கட்டப் படப்பிடிப்பை (Schedule-1) படக்குழுவினர் வெற்றிகரமாக முடித்துள்ளனர். ‘சாவடி’ படத்தின் பாகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கோணத்தில், விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்தக் கதை-2 உருவாகி வருகிறது.

தற்போது முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மிக விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு (Schedule-2) தொடங்கப்பட உள்ளது. படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *