களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருப்புப் பாலத்திற்கு அருகில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று(26) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

குறித்த சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்த நபர் சுமார் 50 வயதுடைய 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

அவரது தலைமுடி ஒரு அங்குலம் வரை வளர்ந்திருந்ததாகவும், நீல நிற டி-சேர்ட் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *