பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து நவீன இயந்திர துப்பாக்கிகள் மீட்பு

பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

 

அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த அலுவலகத்தில் இரண்டு கோல்ட் எம்கே18 1 எம்203 நவீன இயந்திரத் துப்பாக்கிகள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

 

கோல்ட் எம்கே18 1 எம்203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப்படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற துப்பாக்கிகள்.

 

விலையுயர்ந்த அமெரிக்கத் தயாரிப்பான எம்-16 நவீன இயந்திரத் துப்பாக்கியில், எம்203 கிரனேட் ஏவிகள் பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த துப்பாக்கிகள்.

 

அரச படையினர் கூட சாதாரணமாகப் பாவிக்காத இந்தவகைத் துப்பாக்கிகள் மட்டக்களப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தில் இருப்பது கண்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

 

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கிகள் முன்னைய அரசாங்கத்தின் காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

இரண்டு துப்பாக்கிகளும், மட்டக்களப்பு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *