முல்லைத்திவு – முள்ளியவளையில் விபத்து: ஆசிரியர் படுகாயம்!

முல்லைத்திவு – முள்ளியவளை வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீதியின் ஒருபக்கத்தில் நெல் காயவிடப்பட்டிருந்த நிலையில்,
மறுபக்கமாக நோயாளர் காவு வண்டியும் மோட்டார் சைக்கிளும் எதிரெதிராக பயணித்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (ஆசிரியர்) உடனடியாக மாஞ்சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *