சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் புதுமுக மாணவர்களுக்கு வரவேற்பு!

 

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில், 2026இல் தரம் 6க்கு அனுமதிக்கப்படும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (26) பாடசாலை முன்றலில் விமர்சையாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் கே எல் ஏ. ஜௌபர் அவர்களின் வழிகாட்டலில், உதவி அதிபர் எம்.எச்.லாபிர் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பாடசாலையின் பழைய மாணவரும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு அதிகாரியுமான எம்.எம். அஹமட் சனூன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரையாற்றினார்.

இதன்போது, மாணவர்கள் ஆசிரியர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பரிசு வழங்கி மகிழ்விக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *