ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர்ப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ் ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் சம்பவத்தில் ஆனந்தபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த சபாபதி எனும் 82 வயதுடைய முதியவரே இவ்வா பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *