யாழ் ஆழியவளை பகுதியில் கைக்குண்டு மீட்பு !

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்றையதினம்(21) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஆழியவளை செம் மண் வீதி அருகாமையில் உள்ள, சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் கைக்குண்டு ஒன்றினை புலனாய்வுத் துறையினர் பாதுகாப்பான முறையில் அகற்றி மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *