இன்று(22) அதிகாலை மாதம்பிட்டிய “சத்ஹிரு செவன” தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை பொலிஸார் சோதனையிட்ட போதே அவர்களிடம் இருந்து, 1 கிலோ 501 கிராம் ஐஸ் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதை பொருட்கள், இலத்திரனியல் தராசு மற்றும் போதை பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணப்பை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

