கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்து இன்றைய தினம் (18) காலை ஹல்துமுல்ல, ஊவா தென்னன நயமதித்த பகுதியில் சாலையை விட்டு விலகி ஒரு பாறையில் மோதி கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தோடு, ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் காயமடைந்தனர் என்று ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியவில்லை என்றும், ஓட்டுநரின் கதவு திடீரென திறந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, ஒரு தடுப்புச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
பேருந்திலிருந்து சாலையின் குறுக்கே விழுந்த ஓட்டுநர், பேருந்தில் சிக்கி படுகாயமடைந்தார். உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஓட்டுநர் உயிரிழந்துள்ளாக தெரியவந்துள்ளது.
ஏழு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

