அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் நேற்றைய தினம்(15) மாலையில் வீடு ஒன்றில் திடிர் தீவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ விபத்தில் வீட்டின் கூரை சேதமடைந்ததுடன் வீட்டின் அறையில் இருந்த பெரும் தொகையான தளபாடப்பொருட்கள் என்பன தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.
மேலும் உயிர் சேதம் ஒன்றும் இடம்பெறவில்லை எனவும் குறித்த தீ விபத்துக்கான சரியான காரணம் அறியப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினமான நேற்று தைத்திருநாள் என்பதனால் வீட்டின் உரிமையாளர்கள் சிலர் வெளியில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
வீட்டில் சகோதரி இருவர் மாத்திரமே இருந்துள்ளனர். அப்போது தீ ஏற்பட்டுள்ளதை கண்டு சத்தமிட்டு பின்னர் குறித்த தீயினை பொதுமக்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்கொண்டு வந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

