மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆலோசனைத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊடகங்கள் மற்றும் சில குழுக்களால் பரப்பப்படும் தவறான தகவல்கள் காரணமாக இஸ்ரேலில் உள்ளவர்கள் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எழும் எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் இலங்கைத் தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.
எனவே, ஏதேனும் ஒரு வகையில் அவசர ஏவுகணைத் தாக்குதல் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் ஏற்பட்டால், பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2025 ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் எந்தவொரு இலங்கையரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையினர் மற்றும் தூதரகம் தொடர்ந்து வழங்கிய விழிப்புணர்வு மற்றும் அவசர சைரன் ஒலிகளுடன் கிட்டத்தட்ட அனைவரும் தாங்கள் வசிக்கும் இடங்கள் அல்லது அதற்கு அருகில் உள்ள பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் புகுந்ததே இதற்குக் காரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

