ஜனாதிபதி ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளார்.

 

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன்னர் ஜனாதிபதி நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

 

ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வோல்டரின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

 

நாளை (11) முதல் ஜூன் 13 வரை இடம்பெறும் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி, ஜேர்மனியின் ஜனாதிபதி, பெடரல் அரசின் முதலமைச்சர்கள் மற்றும் பிற உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.

 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

இன்று இரவு சுமார் 08.33 மணிக்கு கட்டார் ஏர்வேஸ் விமானம் QR-655 மூலம் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் டோஹாவுக்குப் புறப்பட்டு சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் ஜேர்மனிக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *