சீனா விஜயம் செய்த டில்வினின் விசேட சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அந்தக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ள இந்த விஜயத்தில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, சீனாவின் ஜஜியாங் மாகாண ஆளுநர் லியு ஜியேவைச் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 

அந்தச் சந்திப்பில், இலங்கை மற்றும் சீனா இடையேயும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையேயும் நீண்டகால நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையில் நிலவிய ஊழல் மிக்க ஆட்சி முறைமையை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் நிறுவப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றுவதற்கு ஒரு திட்டத்துடன் பயணித்து வருவதாக, டில்வின் சில்வா இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *