முல்லைத்தீவு மல்லாவி விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு, மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

 

கடந்த 23ஆம் திகதி இரவு 7:30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் குறித்த நபர் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

 

இதனையடுத்து அவர் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (06) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

 

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மால்லாவிப் பொலிஸார் நெறிப்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *