வெளிநாட்டு தொழிலாளர்களின் பணமனுப்பல் அதிகரிப்பு

2025 மே மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணமனுப்பல் 641.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரையிலான மொத்த பணமனுப்பல் 3,102.2 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

 

இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பதிவான 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களைவிட 18.2% அதிகமாகும்.

 

இதற்கிடையில், 2025 மே மாதத்தில் பதிவான சுற்றுலா வருவாய் 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

 

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பதிவான 1,405.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைவிட 9.8% அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *