காரில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திய சந்தேக நபர் கைது

சட்டவிரோத மதுபானத்தை காரில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை (02) இரவு கைதுசெய்துள்ளனர்.

 

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் கம்பஹா, பமுனுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபரிடமிருந்து 506 லீற்றர் 250 மில்லி மீற்றர் சட்டவிரோத மதுபானத்தை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய வட்டுவத்த பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் ஆவார்.

 

சந்தேக நபரை பொலிஸ் அதிரடிப்படையினர் பமுனுகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *