யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 200 லீட்டர் கோடா மற்றும் 19.5 லீட்டர் கசிப்புடன் ஒருவர் திங்கட்கிழமை (02) கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

 

சண்டிலிப்பாய் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த வீட்டினை பொலிஸார் முற்றுகையிட்ட போது, வீட்டில் இருந்து 200 லீட்டர் கோடா மற்றும் 19.5 லீட்டர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

அதனை அடுத்து குறித்த வீட்டில் இருந்த சுன்னாகம் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட இளைஞனை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *