உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” பயனாளிகளின் வீடுகளுக்கு ஆரம்பக்கட்டமான அடிக்கல் நடும் நிகழ்ச்சி

 

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக   நிந்தவூர், காரைதீவு, நீலாவணை, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு ஆரம்பக்கட்டமான அடிக்கல் நடும் நிகழ்ச்சித் திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் இன்று (28) புதன்கிழமைஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனி, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் மற்றும் அதிகாரிகள், அப் பிரதேச செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பிரதி அமைச்சின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *