விக்னேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கார்த்திகை உற்சவம்!

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் தா. தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்வுற்சவத்தில், கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் புனித நாளில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருநாள், தமிழர்களின் தொன்மையான சைவ மரபுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீகத் திருநாளாக விளங்குகின்றது.

இருளை அகற்றி ஒளியைப் போற்றும் இத்திருநாளை முன்னிட்டு ஆலயங்களிலும் இல்லங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இறைவழிபாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அகல் விளக்கின் ஒளியானது, மனித மனத்தில் குடிகொண்டிருக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றுவதன் அடையாளமாகக் கருதப்படுகின்றது\.

மூதாதையர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த தொன்மையான சைவத் தமிழ் மரபுகளையும் ஆன்மீகப் பண்பாடுகளையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இவ்வாறான கார்த்திகைத் திருநாள் உற்சவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *