அம்பாறை மாவட்டத்தில் அவசரகால மற்றும் அனர்த்தச் சூழ்நிலைகளில் உயிர்காக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட குழுவின் முதலாவது பயிற்சியை நிறைவு செய்த 30 பேர் கொண்ட உயிர்காப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்காணிப்பிலும், பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் வழிகாட்டலிலும், அல் உஸ்வா முஸ்தபா மௌலவி தலைமையில் 2025.02.14ஆம் திகதி இக்குழு ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் ஏழு மாதப் பயிற்சியை நிறைவு செய்த 30 இளைஞர்கள், 2026.03.01ஆம் திகதி முதலாவது உயிர்காப்புப் படையாக இணைக்கப்பட்டனர். இதனையடுத்து, இரண்டாவது குழுவினருக்கான பயிற்சிகள் 2026.08.22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
மேலும், மூன்றாவது குழுவினரை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளதுடன், மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

