இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான 15 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி, 53 பந்துகளில் 204 ஓட்டங்களைக் குவித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
28 பந்துகளில் சதம் அடித்து விசேட சாதனை படைத்துள்ள அவர், 40 பந்துகளில் 150 ஓட்டங்களையும், 52 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் எட்டியுள்ளார்.
அதேபோல், ஒரே இன்னிங்ஸில் 28 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தனது 204 ஓட்டங்களில் 196 ஓட்டங்களை பவுண்டரிகள் மூலமாகவே பெற்றுள்ளதுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் 11 பந்துகளில் அரைச்சதம் அடித்த சாதனையும் அவருக்குச் சொந்தமானதாகப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 249/8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இந்தியா A அணி 14.2 ஓவர்களில் 254/3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

