அம்பாறை, தமன – மொரகஹப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை, கழிவறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த பெண்ணை, வீட்டின் பின்புறத்தில் நின்றிருந்த காட்டு யானை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிராமத்தைச் சூழவுள்ள வனப்பகுதியிலிருந்து மின்சார வேலியை உடைத்துக்கொண்டு காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

