அமெரிக்காவில் கடும் புயல் மற்றும் குளிர் எச்சரிக்கை

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் தின (Thanksgiving) விடுமுறைக் காலத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வானிலை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உருவாகும் வலுவான கடலோரப் புயல் காரணமாக கனமழை, பலத்த காற்று மற்றும் கடலோர வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் கனமழை மற்றும் கடல் அலைகளின் தாக்கத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

மேலும், அமெரிக்காவின் பல மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் உறைபனி நிலவும் எனவும், இதனால் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanksgiving விடுமுறையை முன்னிட்டு சுமார் 8.1 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், வீதிப் போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் விமானச் சேவைகளில் தாமதங்கள் அல்லது இரத்துச் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, பயணங்களின்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *