கடற்கரையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் 10 கிராம் ஐஸ் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் இன்று (19) வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இரு இளைஞர்களையும் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் 08ஆம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிகாட்டலிலும், அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தநாராயணவின் நெறிப்படுத்தலிலும் இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யூ.எஸ். நிசாந்த வெதகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *