போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் நேரடி விசாரணை!

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் நீண்டகாலமாக இடம்பெறுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸார் நேரடி விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளனர்.

குறித்த பகுதியில் சுமார் ஐந்து ஆண்டுகளாக இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் ஏனைய சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், பராமரிப்பின்றிக் காணப்படும் காணிகள் பற்றைக்காடுகளாக மாறியுள்ளதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு அரச அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என வீரமுனை 04 சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் எம்.எம். முஹம்மட் அலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாட்டுக் கடிதங்களின் பிரதிகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (22) சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மேலும், எதிர்வரும் 27ஆம் திகதி அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல சம்மாந்துறைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *