சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2027, ஜனவரி 16 முதல் 18ஆம் திகதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
இதற்கான இலச்சினை இன்று (22) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் தாய்லாந்து பதிப்பாளர்கள் சங்கம் மதிப்புறு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நூல்களை உலக மொழிகளிலும், உலக மொழிகளின் சிறந்த நூல்களைத் தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட இப்புத்தகத் திருவிழாவில், 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தை உலகளவில் கொண்டு சேர்ப்பதுடன், சர்வதேச பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்களை ஒன்றிணைக்கும் தளமாக இத்திருவிழா அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

