லாப்ஸ் எரிவாயு விலை உயர்வால் அரசாங்கம் மீது விமர்சனம்!

ரோஹண விஜேவீரவின் 37ஆவது நவம்பர் வீரர் நினைவேந்தல் தினத்தன்று லாப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை வேதனையளிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பிரியங்கர மகாமுல்லகே தெரிவித்துள்ளார்.

நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் லாப்ஸ் எரிவாயுவின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே எரிவாயுத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களைப் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏழை மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்ததாகக் கூறும் அரசாங்கம், அவர்களைப் பாதிக்கும் வகையில் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும்,, பட்டலந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் முன்னர் ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்த போதிலும், இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *