கணவன் – மனைவி கொலை வழக்கில் ஒருவர் கைது!

உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், நேற்று மாலை (13) களுத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லஸ்ஸ (Gallassa) பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினுள், அதன் உரிமையாளரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *