கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கைக்குச் சொந்தமான ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றின் மூன்று (03) மீனவர்கள் திடீர் சுகயீனமுற்ற நிலையில்,கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையினரால் இன்று காலை (09.11.2026) துரிதமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
2026 நவம்பர் 06ஆம் திகதி திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏழு (07) மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற ‘செஷான் புதா 02’ (IMUL-A-1715 MTR) எனும் ஆழ்கடல் மீன்பிடிப் படகு, திருகோணமலையிலிருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்த மூன்று (03) மீனவர்கள் திடீர் திடீர் சுகயீனமுற்றள்ளனர்.
குறித்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்காக கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள P 450 என்ற அதிவேகத் தாக்குதல் படகு சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, துரிதமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

