முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) வருகை தந்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் தனிச் செயலாளருமான சுகீஸ்வர பண்டார தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷ வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

