2027 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பாதீட்டு உரையைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதி மாலை இடம்பெறும்.
பாதீட்டின் குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
பாதீட்டு விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

