மான் தாக்குதலில் கைதி பலி!

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த கைதியொருவர், மான் தாக்கியதில் உயிரிழந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சிறைச்சாலை வளாகத்தில் திரிந்த மான் தாக்கியதில் படுகாயமடைந்த 30 வயதுடைய வரபலான பகுதியைச் சேர்ந்த குறித்த கைதி, தெம்பரகவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தெம்பரகவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (09) இடம்பெறவுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வீரவில காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *