இலங்கை பொலிஸாரின் தீபாவளிக் கொண்டாட்டம்!

இந்து மக்களால் கொண்டாடப்படும் சமயப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்ட வருடாந்த பொலிஸ் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இலங்கை பொலிஸ் சேவையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடையே சமய நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் குறித்த நிகழ்வு நேற்று மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலய விழா மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய-பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநந்தன் இளங்குமரன், கந்தசாமி பிரபு மற்றும் எம். ஜெகதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலய பிரதம குருக்கள் தலைமையில் பிரதான சமய வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் கலாசாரப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் பாரம்பரிய நடனக் குழுக்களும் இணைந்து பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

மேல் மாகாணத்தில் கடமையாற்றும் சுமார் 650 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *