நாட்டில் நடைமுறையிலுள்ள ‘மேன்பவர்’ (Manpower) ஊழியர் முறைமையை ஒழிப்பதற்காகத் அரசாங்கம் தற்போது புதிய சட்டங்களை இயற்றி வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (07) கொழும்பில் நடைபெற்று வரும் தொழிற்சங்க தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நேரடி வேலையில் ஈடுபட்டுத் தனது உழைப்பை வழங்கும் ஊழியருக்காக இடைத்தரகர் ஒருவருக்குப் பணம் செலுத்துவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.
மேன்பவர் ஊழியர்களின் வேலைகளை நிரந்தரமாக்குவதற்கும் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தைத் தொடர்ந்தும் வலுப்படுத்தப் போவதாக அவர் உறுதியளித்தார்.

