இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 7 தமிழக மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 7 தமிழக மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (01) காலை தலைமன்னார் கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, அவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பிற்குள் பெரிய அளவிலான இந்திய மீன்பிடிப் படகுகள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதைக் கண்டறிந்த வட மத்திய கடற்படைக் கட்டளைப் பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுடன், கைதான தமிழக மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னாரிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *