மட்டக்களப்பில் சுருக்கு வலைகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி, பாலமுனை பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சுருக்கு வலைகளுடன் இருவர் நேற்றைய தினம் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வலைகளைக் கொண்டு சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டு சந்தேகநபர்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *