எரிவாயு விலையில் மாற்றமில்லை !

நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் 4,365 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் சிலிண்டர் 1,750 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 815 ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டு தற்போதைய விலைகளையே தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *