துபாயில் தங்கத்தால் அமைக்கப்படும் நடைபாதை விரைவில் திறப்பு!

உலகிலேயே முதல் முறையாக, 24 கரட் தங்கத்தினாலான நடைபாதையொன்று துபாயில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நடைபாதை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், உலகின் முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. குறிப்பாக, தங்கம் மற்றும் ஆபரண வர்த்தகத்திற்குப் புகழ்பெற்ற நகரமாகவும் துபாய் திகழ்கின்றது.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில், துபாயின் தெய்ரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தங்க வர்த்தக மாவட்டத்தில் இந்தப் புதிய நடைபாதை உருவாக்கப்பட்டு வருகின்றது.

தங்கம் மற்றும் ஆபரண விற்பனை, மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.

துபாயின் தங்க வர்த்தகத்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் இந்தத் தங்க நடைபாதை, சுற்றுலாப் பயணிகளின் புதிய கவர்ச்சித் தலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *