2027 உலகக் கோப்பை: பிசிசிஐ தலைவர் அதிரடி கருத்து!

2027 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறுவார்களா என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

மிதுன் மன்ஹாஸ் தெரிவிக்கையில், வீரர்களின் வயதை அடிப்படையாக வைத்து அவர்களை போட்டிகளுக்கு தேர்வு செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு வீரர் தொடர்ந்து நல்ல உடற்தகுதியுடன் இருந்து, சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டுக்காகப் போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தருகிறார் என்றால், அவரைத் தேர்வு செய்வதற்கு அதுவே முக்கியமான தகுதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2027 ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறவுள்ளது.

அப்போது ரோஹித் சர்மா 40 வயதை எட்டியிருப்பார். விராட் கோலிக்கு 38 வயதாக இருக்கும். இதனால், அடுத்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருவரும் இடம்பெறுவார்களா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *