ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பதுளையில் பேரணி !

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, இன்று (21) பதுளையில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பதுளை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணியில் பௌத்த பிக்குமார்களும், பௌத்த மத ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்கி அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மதகுருமார்கள் பொதுமக்களிடம் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.

பதுளை நகருக்கு வருகை தந்த பொதுமக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டதுடன், ஞானசார தேரரின் விடுதலைக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தப் பேரணி மற்றும் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள் பதுளை நகரில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *