அவுஸ்திரேலிய பெண் எம்.பி. மீது கார் மோதி கொலை முயற்சி!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், வாங்காராட்டா நகரில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் (65) மீது கார் ஏற்றி கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொகுதி அலுவலகத்திற்கு வெளியே காரில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது, 43 வயதுடைய நபர் ஒருவர் காரால் மோதியதுடன், மீண்டும் பின்னோக்கி வந்து தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த ஹெலன் ஹெய்ன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும், மற்றொரு காலைக் காப்பாற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்களின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரெண்டன் நுஜென்ட் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதலின் பின்னணி மற்றும் பயங்கரவாதத் தொடர்புகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *