விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மியன்மார் பிரஜை கைது!

‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்த மியன்மார் பிரஜை ஒருவர், இன்று புதன்கிழமை (21) கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மியான்மார் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் இன்று 1.45 மணியளவில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த பயணப்பொதிகளுக்குள் ஆடைகள், இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கோடியே 64 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 கிலோகிராம் 646 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய 3 பொதிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருடன் சந்தேகநபரை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்காகக் கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைமையகத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *