2027 மகளிர் பிரீமியர் லீக் ஏலம் குறித்த அறிவிப்பு!

2027 ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்த ஏலம் எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஏலப் பட்டியலில் மொத்தம் 119 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 22 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். 97 பேர் இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீராங்கனைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீராங்கனைகள் பிரிவில் 27 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 14 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்கள். 13 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் 146 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அணிகளில் காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்காக அணிகள் போட்டியிட உள்ளன.

ஐந்து அணிகளிலும் நிரப்பப்பட வேண்டிய 27 இடங்களில், 20 இடங்கள் இந்திய வீராங்கனைகளுக்கும், 7 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *